புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா.! எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம்.!
புதுசரியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக இன்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதே போல தற்போது, புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் சார்பாக சிவா ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய பொதுத்துறை அமைச்சர் , புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், சட்டம் இயற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டும் என கூறினார். மேலும், ஆன்லைன் விளையாட்டு கட்டுப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாவும் குறிப்பிட்டார்.