புதுச்சேரியில் இன்று முதல்வராக பதவியேற்கிறார் என்.ரங்கசாமி.
புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலத்தில் மொத்தம் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் இன் சட்டப்பேரவைக் குழு தலைவராகஎன்.ரங்கசாமி அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, மே 3-ஆம் தேதி என்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.
இதனையடுத்து, இன்று பிற்பகல் 1:20 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் புதுவையின்20-வது முதல்வராக என்.ரங்கசாமி அவர்கள் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்போர், அழைப்பிதழை கண்டிப்பாக கொண்டுவரவேண்டும் என்றும், அழைப்பிதழ் உள்ளவர்கள் விழா தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வந்து இருக்கையில் அமர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…