மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும், மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்.
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும் மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன், கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி, ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முயன்றார் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
இவர் தன் முகநூல் பக்கத்தில், நிதி ரீதியாக பின்தங்கிய கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதைக் காரணம் காட்டி அகாடமி தனக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பை மறுத்ததாகக் குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக, ராதாகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்காக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், அகாடமியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.பி. மோகனன் அவர்கள் கூறுகையில், ராதாகிருஷ்ணன் அவரது உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…