புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார்.
இதனால், கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸிடம், பாஜக பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பாஜக நடத்திய தொடா் பேச்சுவாா்த்தை காரணமாக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி நேற்று இரவு உறுதியானது.
பா.ஜ.க. கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரஸ் பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் அமித்ஷா பேசியதையடுத்து கூட்டணி உறுதியானது என கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ரங்கசாமி கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதால் இதுநாள்வரை நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…