வயல்வெளியில் மர்மமான முறையில் மயங்கி கிடந்த சிறுமிகள் – 2 சிறுமிகள் உயிரிழப்பு!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் வயல்வெளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் மயக்க நிலையில் மீட்கப்பட்டதில், 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் 13, 15, 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் நுரை தள்ளிய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் கால்நடைகளுக்கு உணவளிக்க சென்றுள்ளதாகவும் அதன்பின் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமிகளை வாயில் நுரை தள்ளியபடி பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் சிறுமிகள் மூவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உடலில் எந்த காயமும் சிறுமிகளுக்கு இல்லையாம். இதுகுறித்து தற்பொழுது 6 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், ஒரு சிறுமி அவர்களின் தோழி என்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது சிறுமிகள் கண்டெடுக்கப்பட்ட வயல்வெளியில் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வைத்து போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.