மகாராஷ்டிராவில் பூமிக்கு அடியில் கேட்கும் மர்மமான ஒலி மக்கள் பீதி

Default Image

மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் ஹசோரி என்ற கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக நிலத்தின் அடியில் மர்மமான ஒலிகள் கேட்கப்படுகின்றன. இந்த நிகழ்வை ஆய்வு செய்ய இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்கு வருமாறு மாவட்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹசோரி கிராமத்திற்கு 28 கி.மீ தொலைவில் உள்ள கில்லாரி என்ற இடத்தில் 1993 இல் நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 9700 க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். அந்த இடத்தில் இருந்து எந்த நில அதிர்வு நடவடிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் மக்களின் தகவலின் படி செப்டம்பர் 6 முதல் இந்த மர்மமான சத்தம் கேட்கப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் குழப்பமும் அச்சமும் அடைந்துள்ளனர்.

லத்தூர் மாவட்ட ஆட்சியர் பிருத்விராஜ் கிராமத்திற்கு சென்று மக்களை பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்