IAF aircraft which went missing in 2016 | [Photo: X/@ShivAroor]
கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது.
அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் பணியாளர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இருப்பினும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின், நீண்ட நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
சென்னை கடல் பகுதியில் இருந்து 310 கி.மீ தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், கடலுக்கடியில் கிடக்கும் பாகங்கள், காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மல்டி-பீம் சோனார் உள்ளிட்ட பல அதிநவீன கருவிகளை பயன்படுத்தி 3400 மீ ஆழத்தில் இந்த தேடல் பணி நடத்தப்பட்டதில், மாயமான விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…