மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு!

AN-32(K-2743)

கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது.

அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் பணியாளர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இருப்பினும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின், நீண்ட நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

சென்னை கடல் பகுதியில் இருந்து 310 கி.மீ தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், கடலுக்கடியில் கிடக்கும் பாகங்கள், காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மல்டி-பீம் சோனார் உள்ளிட்ட பல அதிநவீன கருவிகளை பயன்படுத்தி 3400 மீ ஆழத்தில் இந்த தேடல் பணி நடத்தப்பட்டதில், மாயமான விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்