மாஸ்க் அணிந்து சென்ற மர்ம நபர்கள் சாலையில் சென்ற நபர் மீது ஆசிட் வீசி சென்றுள்ளனர்.
ஹரியானா மாநிலம் பானிபட் எனும் இடத்தில் போர்வை கம்பெனியில் வேலை செய்ய கூடியவர் தான் 37 வயது பெண்மணி, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இவர் வேலை முடிந்து 6.30 மணியளவில் கணவருடன் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அப்பெண் மீது அசீட்டை வீசி சென்றுள்ளனர். உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், அவருக்கு கழுத்து மற்றும் முகத்தில் அதிகளவு காயங்கள் ஏற்பட்டதால், ரோக்தாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளது. காத்திருந்த இருவர் அவர் மீது அசீட் வீசி சென்றுள்ளதாகவும், இந்த பெண் ஏற்கனவே ஆண்களுடன் ஏற்கனவே தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறியுள்ளார். இந்த மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…