மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரிடம் இருந்து 11 சிம்கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் பிகார், ஜார்காண்ட் மாநிலங்கள் மட்டுமின்றி, பங்களாதேஷுக்கும் போன் கால் பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தங்கியுள்ள வீட்டிற்குள் கடந்த வாரம் ஒரு மர்ம நபர் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த மர்ம நபரை போலீசார் பிடித்தனர்.
பிடிபட்ட அந்த மர்ம நபர் கடந்த வாரம் முதல் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார். அவரை பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது.
அதாவது, அவர், மாட்டிக்கொள்வதற்கு முன்னர் சுமார் 7 முறை மம்தா வீட்டருகே வந்துள்ளாராம். மாட்டிக்கொண்ட அன்றைய தினம் கூட காலையில் பாதுகாவலர்களால் பிடிபட்டு விட்டாராம்.
அவரிடம் 11 சிம்கார்டுகள் இருந்துள்ளதாம். அதன் மூலம் பங்களாதேஷ் நாட்டிற்கு போன் கால் பேசியுள்ளார் என்கிற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு யாரிடம் பேசினார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மேலும், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களுக்கும் போனில் பேசியுள்ளார் அந்த மர்ம நபர். பங்காளதேஷ் நாட்டிற்கு சிலமுறை சட்டவிரோதமாக பயணம் செய்ததும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…