இந்து மகாசபையின் தலைவரை பட்ட பகலில் சுட்டு கொன்ற மர்ம நபர்கள் ..!

Default Image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹிந்து சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகம் லக்னோவில் உள்ள குர்ஷித் பாக் பகுதியில் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அலுவலகத்தில் இருந்த கமலேஷ் திவாரியை சண்டை இழுக்கும் நோக்கத்துடன் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இவர்களின் இந்த செயலால் கோபம் அடையாத திவாரி அந்த கும்பலை அழைத்துச் சென்று அருகில் இருந்த டீ கடையில்  டீ வாங்கி கொடுத்து உள்ளார்.
பின்னர் அவர் வாங்கி கொடுத்த டீயை குடித்தனர். அதிலும்அவர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்களின் நோக்கமே திவாரியை கொல்ல வேண்டும் என்பதுதான்.  பின்னர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திவாரியை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதனால் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த திவாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். திவாரி கொல்லப்பட்ட இடத்தில் நாட்டு துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.
மேலும் திவாரி சுட்டுக் கொல்வதற்கு முன் அவரது கழுத்தில் மர்மநபர் கத்தியால் வெட்டி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இவர் ஹிந்து சமாஜ் கட்சியில் சேர்வதற்கு முன் இந்து மகாசபையின் தலைவர் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்