டெல்லி காக்ரோல கிராமத்தைச் சேர்ந்த சொத்து வியாபாரி நரேந்தர் (45). நேற்று முன்தினம் துவாரகா பகுதியில் இவர் காரில் இருந்தார்.அப்போது பைக்கை சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு. தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் நரேந்தர் காருக்கு அருகில் வந்துள்ளனர்.
அப்போது நரேந்தர் காரில் இருந்து புறப்பட முயன்ற போது தலைக்கவசம் அணிந்து இருந்தவர்களில் ஒரு நபர் சரமாரியாக நரேந்தரை சுட்டுள்ளார். நரேந்தர் தப்பிக்க முயன்ற போது இன்னொரு கார் மீது ஏறி நின்று அந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நரேந்திரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நரேந்தரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நரேந்தர் மீது மோசடி , கொலை முயற்சி மற்றும் தாக்குதல் ஆகிய வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு சொத்து அல்லது பண தகராக என்ற அனைத்து கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…