ஆந்திர மாநிலத்தில் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு 10 கோடி மதிப்பிலான செல்போன்களை அடுத்த லாரியில் வைத்து கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவன கிடங்கிலிருந்து ஆந்திராவிற்கு செல்போன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு உள்ளது. அப்போது சில மர்ம நபர்கள் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு, அந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் லாரியை சோதனையிட்டபோது அதில் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்படுள்ளது தெரியவந்தது. அதில் இருந்த செல்போனை மற்றொரு லாரியில் வைத்து மர்ம நபர்கள் கடத்தி இருக்கலாம் என கருதி ஆந்திர மாநில காவல்துறையினர் தற்போது தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்க சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…