உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரேட்டர் நொய்டா பகுதியில் 43 வயதை சேர்ந்த நபர் ஒருவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் வழக்கம்போல் அவர் பிரியாணி விற்பனை செய்து வந்த போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர் திடீரென தாக்கியுள்ளனர்.
அதற்கு அவர் எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.அப்போது அவர்கள் என்க ஏரியாவில் எதற்கு பிரியாணி விற்பனை செய்கிறாய் என்றும் அவருடைய ஜாதியை பற்றியும் அவதூறாக பேசியுள்ளனர்.இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடந்து அந்த 3 நபர்களின் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் அந்த வீடியோவில் முகத்தை மறைத்திற்கும் ஒரு நபர் அந்த விற்பனையாளரை முகத்தில் குத்துகிறார்.
இந்த சம்பவம் குறித்து கௌதம் புத்நகர் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்ததாக கூறப்படுகிறது.மேலும் அவர் பிரியாணியின் விலை மற்றும் இருக்கைகள் வைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
ஆனால் தாக்குதலுக்குள்ளான நபர் மூன்று பேர் சனிக்கிழமை பிற்பகல் தன்னை தாக்கியதாகவும் அவர்களை தடுத்தபோது ஜாதி ரீதியாக தம்மை திட்டியதாகவும் புகார் அளித்தால் மோசமாக விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள் தப்பி ஒட்டியதாகவும் கூறியுள்ளார்.என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து அந்த நபர்களை தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…