தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்…!

Default Image

மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் மீது மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் 

மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் கொல்கத்தா செல்வதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்திற்கு, நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சருடன் வந்தவர்கள் அபாயக் குரலிட்டுள்ளனர்.

இதனையடுத்து வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Geetha Jeevan
vetrimaaran
2nd session of the Budget Session
Donald Trump Canada
Rohit Sharma about retirement
tn school leave