டெல்லியில் மர்ம பொருள் வெடிப்பு… PVR தியேட்டருக்கு விரைந்தது தீயணைப்பு வாகனங்கள்!
சம்பவ இடத்தில் வெள்ளைப் பொடி போன்ற பொருட்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இனிப்பு கடைக்கு அருகே ஒரு ஸ்கூட்டரில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், வெடிப்பு சத்தம் பெரியதாக கேட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த இடத்தில் வெள்ளைப் பொடி போன்ற பொருட்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது, அதன் பின்னரே சம்பவத்திற்கான காரணம் தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025