ஆந்திராவை தாக்கிய மர்ம நோய்! ஒருவர் உயிரிழப்பு! 250 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் சிறப்பு சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதலில் இந்த நோய் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் மக்கள் நோய் வாய்ப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் தெளிவான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.