ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய் – காரணம் இது தானாம்!
ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கான காரணம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் கலந்திருப்பது தான் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு எனும் கிராமத்தினர் திடீரென மயங்கி விழுவதாகவும், வித்தியாசமான சத்தங்களை போடுவதாகவும் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோய்க்கான கரணம் என்ன என தெரியாமல் மருத்துவர்கள் மற்றும் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட இந்த நோயால் பலரும் பதற்றமடைந்தனர்.
இந்நிலையில், தற்பொழுது வரை இந்த மர்ம நோயால் 350 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நோய்க்கான காரணம் கண்டறிவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களில் ஈயம் மற்றும் நிக்கல் துகள்கள் கலந்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும், அகில இந்திய இரசாயன தொழில்நுட்ப கழகம் சார்பில் இதுகுறித்து பரிசோதனைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியதும் தான் இந்த மர்ம நோய்க்கான முழுமையான கரணம் தெரிய வரும்.