மியான்மர் அரசு அதிரடி அறிவிப்பு ..!
7 லட்சம் ரோஹிங்யா முஸ்லீம்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயார் என மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நடந்த பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் தாவ்ங் டுன் , 7 லட்சம் ரோஹிங்யா முஸ்லீம்களும் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்க தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
தங்கள் நாட்டில் போர் எதுவும் நடைபெறவில்லை என்றும், போர்க்குற்றம் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் கூறினார்.