எனது மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது..! ராகுல்காந்தி ட்வீட்..
எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது என ராகுல் காந்தி டீவ்ட் செய்துள்ளார்.
ராகுல்காந்தியை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்:
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுலுக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை :
அதன்படி, பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல்காந்தி ட்வீட்:
இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”எனது மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே எனது கடவுள், சத்தியத்தை பெறுவதற்கான வழிமுறை அகிம்சைதான் – மகாத்மா காந்தி” என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
मेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन।
– महात्मा गांधी
— Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023