தயவுசெய்து ஐயா! நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன். நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படுக்கை பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களாலும் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய செய்தியாக தற்போது பரவி வருகிறது.
இந்நிலையில்உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை சிலர் எடுத்து செல்கின்றனர். அவர்களிடம் எனது அம்மா இறந்து விடுவார் தயவுசெய்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று ஒரு நபர் போலீஸாரிடம் காலில் விழுந்து கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் பிபிஇ உடையில் ஒரு நபர் மருத்துவமனைக்கு வெளியே நிற்கிறார். அங்கிருந்து அவர்களை சிலர் எடுத்து செல்கின்றனர். அப்போது காவலில் இருந்த போலீசாரிடம் முழு கவச உடையில் நிற்கும் நபர், ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சுகிறார். தயவுசெய்து ஐயா! நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன். நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன் என்று என் குடும்பத்தினரிடம் உறுதியளித்து தான் நான் இங்கு வந்தேன் என்று முழங்காலில் நின்று கைகூப்பி கெஞ்சுகிறார்.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…