“சிறையில் என் உயிருக்கு ஆபத்து”- நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ஸ்வப்னா சுரேஷ்!
சிறையில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட, 15 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஸை அண்மையில் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்றிரவுடன் காவல் முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.
அதனை விசாரித்த நீதிபதிகள், ஸ்வப்னா சுரேஷின் நீதிமன்ற காவலை வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ், சிறையில், போலீஸ் அதிகாரிகள் என சிலர் தன்னை சந்தித்து இந்த வழக்கில் தொடர்புடைய சில நபர்களின் பெயர்களை தெரிவிக்க கூடாது என்றும்மீறினால் தனக்கும், தன் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறியதாகவும், சிறையில் எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.