எனது கணவர் தனக்கு வழுக்கை இருப்பதை மறைத்துவிட்டதாக நீதிமன்றத்தை நாடிய பெண்.
மும்பையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், நாய நகர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த மாதம் எனக்கும், எனது கணவருக்கும் திருமணம் நடைபெற்றது. எனது கணவர் அவருக்கு வழுக்கை இருப்பதை மறைத்து, விக் வைத்து ஏமாற்றி விட்டார்.
அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகு தான், எனக்கும், எனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அப்பெண்ணின் கணவர் தானேவில் உள்ள நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி, மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தனக்கு வழுக்கை இருப்பது குறித்து தான் மாமியாரிடம் கூறியதாகவும், அதற்க்கு அவர் இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை எனக் கூறியதாகவும், அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் அப்பெண் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், 4998,406, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தானே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசில் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மூத்த காவல் ஆய்வாளர் கைலாஷ் இவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …