“இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது.. நாளை உங்களின் ஆவணமே நொறுங்கும்!”- கங்கனா ரனாவத்

Default Image

இன்று தனது வீடு இடிக்கப்பட்டது போல, நாளை மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமே நொறுங்கும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநில அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அவருக்கும் அம்மாநில அரசு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி இடிக்கப்பட்டது. தற்பொழுது அவரின் கட்டடங்களை இடிக்கக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பணிகள் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கங்கனா ரனாவத், இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. நாளை மகாராஷ்ட்ர முதல்வரின் ஆவணமே நொறுங்கும் என தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? திரைப்பட மாபியா கும்பல்களுடன் இணைந்து னது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது, நாளை உங்களின் ஆவணமே நொறுங்கும் எனவும், காலச்சக்கரம் மாறிக்கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்