இந்துக்களுக்கு அல்ல, கொரோனாவுக்கு எதிரானது எனது அரசு – மகாராஷ்டிர முதல்வர்!
எனது அரசு இந்துக்களுக்கு அல்ல, கொரோனாவுக்கு எதிரானது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் தற்போது மிக சாதாரணமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் அதனை ஒட்டி நடத்தப்பட உள்ள நிகழ்வுகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியினர் கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள், கொரோனாவை கட்டுப்படுத்த 5 நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாகவும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், அதன் அடிப்படையில் தான் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் பொழுது மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார். வேண்டுமானால் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை வேண்டுமானாலும் பாஜகவிற்கு காட்டுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல, கொரோனாவுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.