நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் தொடர்பில் இருக்கிறோம்..! பிரக்யான் ரோவர் கொடுத்த குட்டி மெசேஜ்..!
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 27ம் தேதி விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோடில் இருந்து பெறப்பட்ட, சந்திரனின் மேற்பரப்பு அல்லது மேற்பரப்புக்கு அருகில் உள்ள வெப்பநிலை மாறுபாட்டிற்கான அளவீட்டை இஸ்ரோ வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் ஆனது ஒரு சிறிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், “வணக்கம் மண்ணுலகம்! இது சந்திரயான் 3 இன் பிரக்யான் ரோவர். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் சந்திரனின் இரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் நலமாக இருக்கிறோம். சிறந்த தகவல்கள் விரைவில் வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hello earthlings! This is #Chandrayaan3‘s Pragyan Rover. I hope you’re doing well. I want to let everyone know that I’m on my way to uncover the secrets of the Moon ????. Me and my friend Vikram Lander are in touch. We’re in good health. The best is coming soon…#ISRO pic.twitter.com/ZbIgvy22fv
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 29, 2023