எனது தந்தை எனக்கு ஹீரோ; மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் – பிரிகேடியர் மகள்!
எனது தந்தை எனக்கு ஹீரோதான், அவரது மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் என மறைந்த வீரர் பிரிகேடியர் மகள் கூறியுள்ளார்.
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் . இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் அவர்களின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டரும் ஒருவர்.
இவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த அவரது மகளான ஆஷ்னா அவரது தந்தை சவப்பெட்டியை பார்த்து கதறி அழுதுள்ளார். அதன் பின்பதாக பேசிய அவர், எனது தந்தை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் எனக்கு ஒரு ஹீரோ. அவர் சீக்கிரம் போய் விட்டார். இருந்தாலும் எங்களுக்கு நல்லது நடக்க அவர் தொடர்ந்து ஆசி புரிவார்.
அவர் எனக்கு நல்ல ஊக்க சக்தியாக திகழ்ந்தவர். இத்தனை வருடங்கள் என்னுடன் அவர் இருந்த காலங்களை நினைத்து கொண்டிருக்கிறேன். அவரது மரணம் எனக்கு ஒரு பெரிய இழப்பு தான். இருந்தாலும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என எனது மனதை தேற்றிக் கொள்கிறேன் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.