எனது தந்தை நலமுடன் உள்ளார் – பிரணாப் முகர்ஜியின் மகன்
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இவருக்கு மூளையில் கட்டி இருந்ததை அடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வதந்தியான செய்திகள் பரவி வந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தனது தனத்தை நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !
Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020