தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது. திமுக 153 இடங்களிலும், அதிமுக 80 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர். இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 119 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 17, மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், திமுக தற்போது இருக்கும் முன்னிலையின் படி, தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் க்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…