பதவி விலகுவதாக கூறவில்லை ..! என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது – சுரேஷ் கோபி விளக்கம்.
சுரேஷ் கோபி: நடைபெற்ற மக்களவை தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் வென்றுள்ளதெனவும் கூறலாம். மேலும், அவர் நேற்று (ஜூன்-9) மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், இன்று காலை தனக்கு மத்திய இணையமைச்சர் பதவி வேண்டாம் எனவும் எம்பியாகவே தொடர விரும்புவதாகவும் சில கருத்துக்களை அவர் மலையாள ஊடகங்கிளிடம் பேட்டி அளித்துள்ளார் என தகவல் வெளியானது. அந்த செய்திகளை மறுத்து தற்போது அவர் க்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. மேலும், பிரதமர் நரேந்திர மோடிஜி தலைமையில் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு செயலாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்”, என பதிவிட்டுள்ளார்.
A few media platforms are spreading the incorrect news that I am going to resign from the Council of Ministers of the Modi Government. This is grossly incorrect. Under the leadership of PM @narendramodi Ji we are committed to the development and prosperity of Kerala ❤️ pic.twitter.com/HTmyCYY50H
— Suressh Gopi (@TheSureshGopi) June 10, 2024