#Corona Breaking : கொரோனா இறப்பை தடுக்க புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா !
கொரோனா இறப்பை தடுக்க புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,கொரோனா பாதிப்பில் இறப்பு சதவிகிதத்தை குறைக்க “மைக்கோ பாக்டீரியம் டபிள்யூ” என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளது.
தொழுநோயை (leprosy) கட்டுப்படுத்த பயன்படும் மைக்கோ பாக்டீரியம் டபிள்யூ என்ற தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர்.
முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திம், எய்ம்ஸ் டெல்லி மற்றும் எய்ம்ஸ் போபால் ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து மைக்கோ பாக்டீரியம் டபிள்யூ ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் கொரோனாவில் இறப்போரை கட்டுபடுத்த இந்த மருந்து உதவும் என கண்டுபிடுத்து உள்ளனர்.
இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு தேவையான எதிர்ப்பு சத்துக்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்தியாவில் விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.