அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் வலியுறுத்தல்!
முத்தலாக் மசோதாவில் முரண்பாடுகள் உள்ளதாகவும் அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் கூறியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சட்டவாரியத்தின் அவசரக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் சஜ்ஜாத் நோமனி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முத்தலாக் மசோதாவை வடிவமைக்கும் போது மத்திய அரசு சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய மசோதாவில் முத்தலாக் கூறிய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றுள்ள நிலையில், சிறை தண்டனை அனுபவிப்பவரால் எப்படி ஜீவனாம்சம் தர முடியும் என சட்டவாரியத்தின் செயலாளர் மவுலானா காலித் சாய்புல்லா கேள்வி எழுப்பினார்.
source: dinasuvadu.com