நிறைவேறிய முத்தலாக் மசோதா ..!மனைவிக்கு வாட்ஸ் அப்பில் முத்தலாக் அனுப்பிய கணவன்..பரபரப்பு..!!
இந்தியாவில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இருக்கும் அவரது கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த ஜாவீத் கானுக்கும், ரேஷ்மா ஆஜீஸ் என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் ஜாவீத் கான், மனைவியை மட்டும் பெங்களூரில் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தனது பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்களை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் ஜாவீத்கான் தனது மனைவி ரேஷ்மாவுக்கு வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளார். இதுகுறித்து ரேஷ்மா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.இந்த விவகாரத்தில் ரேஷ்மாவுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கப் போவதாக மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நம்பிக்கை அளித்துள்ளார்.