முதல்வர் நிவாரண நிதிக்கு ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கிய மூதாட்டி.!
மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சையளிக்கவும் , ஏழை எளிய மக்களுக்கு உதவவும் மக்கள் நிதியளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சவுகான் கோரிக்கை ஏற்று பலர் தங்களால் முயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் சல்மா உஸ்கர்( 82) என்பவர் தன் ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.
संकट की इस घड़ी में अपनी बचत मुख्यमंत्री सहायता कोष में देकर विदिशा की 82 वर्षीय श्रीमती सलभा उस्कर ने जो मदद की है वो बेहद भावनात्मक है। उम्र के इस पड़ाव में भी दूसरों के लिए जीना ही हमारी मूल संस्कृति है। आप जैसी माताओं से ही भारत माता महान हैं।#MPFightsCorona https://t.co/mW5nFseyE4
— CMO Madhya Pradesh (@CMMadhyaPradesh) March 31, 2020
இதையெடுத்து டுவிட்டரில் முதல்வர் சவுகான் வெளியிட்டுள்ள பதிவில் ”உங்களை போன்ற தாய்மார்களின் ஆசியால், கொரோனா வைரஸ் தாக்குதலை அடியோடு ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார்.