பீகார் மாநிலத்தை சார்ந்த நூரி பார்திமா , என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முஸ்தபா பாத்திமாவை மற்றவர்களைப் போல நவீனமாக சிறிய உடைய அணிய வேண்டும் எனவும் ,பார்ட்டிக்கு சென்று மது அருந்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் முஸ்தபா, பாத்திமாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி இருமுறை கருவை கலைக்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாத்திமா வீட்டை விட்டு வெளியேற முஸ்தபா கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்தார் பாத்திமா. இதனால் முஸ்தபா முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து பாத்திமா தன் கணவர் மீது புகார் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். பாத்திமாவின் புகாரைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதுபற்றி விசாரிக்க முஸ்தபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…