குறுந்தகவல் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறிய கம்யூட்டர் என்ஜினீயர்.
பெங்களூரில், டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சி.எல்.ராமையா லே-அவுட்டில் வசித்து வருபவர் முகமது தாரிக். இவர் கம்ப்யூட்டர் என்ஜினியர் அவர். இவருக்கு 26 வயது மதிக்கத்தக்க மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பதாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தின் போது, முகமது தரிக்கின் பெற்றோர் கார் வாங்கி கேட்டதாகவும், இதற்க்கு பெண்ணின் பெற்றோர் கார் வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவர்களது சூழ்நிலையின் காரணமாக அவருக்கு கார் வாங்கி கொடுக்க இயலவில்லை. பின் ஒரு வருடம் களைத்து வாங்கி தருவதாக கூறியிருந்தனர்.
பின்னும் அவர்களால் வாங்கி கொடுக்க இயலவில்லை. இதனையடுத்து, முகமது தரிக்கிற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக 2 குடும்பத்தினர் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், முகமது தாரிக்கின் மனைவி, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் 2 குடும்பத்தினரும் சமாதானமாக பேசி, நாம் சேர்ந்து வாழலாம் என்று கணவரின் செல்போனுக்கு, முகமது தாரிக்கின் மனைவி குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால்,வரதட்சணை கொடுக்கததால் ஆத்திரத்தில் இருந்த முகமது தாரிக், தனது மனைவியுடன் வாழ பிடிக்காததால், செல்போனில் முத்தலாக் என்று 3 முறை கூறி குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். இந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சியாடைந்த முகமது தாரிக்கின் மனைவி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில், முகமது தாரிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…