இன்று மன் கி பாத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முத்தலாக் 80% குறைந்துள்ளது என தெரிவித்தார்.
இன்று அகில இந்திய வானொலியில் தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய உயரங்களை எட்டுவதாகவும் கூறினார். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ள பெண்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார். மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும். திருமணத்திற்கான பொதுவான வயதை நிர்ணயிப்பதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்க நாடு முயற்சித்து வருவதாக மோடி கூறினார்.
‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் வெற்றியால் நாட்டில் பாலின விகிதம் மாறியுள்ளது. பள்ளி செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் மேம்பட்டுள்ளது. ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுதலை பெற்றதாகவும் கூறினார். முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, நாட்டில் முத்தலாக் முறை 80 சதவீதம் குறைந்துள்ளது.
பெண்களே இப்போது மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதால்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…