நாடாளுமன்றம் மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளியேறினர்.
நாடாளுமன்றம் மக்களவையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் தடுப்பு மசோதா ஆவணத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் படி, இஸ்லாமிய ஆண்கள் தங்கள் முறைப்படி பெண்களை மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம்.
முத்தலாக் சட்டம் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ், இடதுசாரிகள் அதே போல் பாஜக கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி, சிவசேனா ஆகிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இஸ்லாமிய பெண்களின் தனிஉரிமை மற்றும் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறினர்.
பின்னர், சபாநாயகர் ஓம்,பிர்லா நடத்திய வாக்கெடுப்பில் முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 303 பேரும் எதிராக 81 பேரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். இறுதியில் பெரும்பான்மை அடிப்படையில் மசோதாவானது நிறைவேற்றபட்டது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எம்.பி மைத்ரேயன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று அவையில் பேசிய அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார்அதிமுக மசோதாவை ஆதரிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…