" முத்தலாக் '' சட்ட மசோதா நிறைவேற்றம்….காங்கிரஸ் , அதிமுக மற்றும் சமாஜ்வாதி M.P-க்கள் வெளிநடப்பு…!!
முஸ்லிம்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லீம் மக்களின் விவாகரத்து விஷயத்தின் முத்தலாக் முறை சட்டவிரோதம் என கடந்த ஆண்டு அறிவித்தது உச்ச நீதிமன்றம் அறிவித்தது.இதனால் உடனடி முத்தலாக் செய்து மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் முத்தலாக்_கின் புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களவையில் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்து புதிய முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த முத்தலாக் சட்ட மசோதா-வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்காததால் உடனடி இந்த முத்தலாக் சட்ட மசோதா விவகாரத்தை கிடப்பில் போட்டது.
இந்நிலையில் தற்போது நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த முத்தலாக் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முடிவெடுத்த மத்திய அரசு இன்றைய மக்களவை கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.சுமார் 5 மணி நேரம் இந்த முத்தலாக் சட்ட மசோதா மீது காரசார விவாதம் நடைபெற்றது.இந்த முத்தலாக் சட்ட மசோதாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் சில திருத்தங்கள் கொண்டு வர பட்ட திருத்தங்களை நிராகரித்து இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியது.இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும் , முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக 11 பேரும் வாக்களித்தனர்.இதில் காங்கிரஸ் , அதிமுக மற்றும் சமாஜ்வாதி M.P-க்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.