இன்று முத்தலாக் மசோதா தாக்கல்:காங்கிரஸ் கட்சியினர் தீவிர ஆலோசனை…!
மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யபடும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,இன்று (31 ம் தேதி )மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யபடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே சட்டமாகும் என்பதால், மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரம், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட அவையில், பாஜகவுக்கு 93 பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 112 பேரும் உள்ளனர். இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 39 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 123 பேர் தேவைப்படும் என்பதால், இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது. நாடாளுமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், முத்தலாக் மசோதாவை கடுமையாக எதிர்த்ததால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் நிலைப்படும் எதிர்ப்பது ஆகும்.இந்நிலையில் இன்று (31 ம் தேதி )மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யபடும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.