முத்தலாக் சட்டத்துக்கு ஒப்புதல்…!முத்தலாக் தடுப்பு சட்டத்தில் 3 திருத்தங்கள்..!மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையிகள், 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் கூட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
முத்தலாக் தடுப்பு சட்டத்தில் 3 திருத்தங்கள்:
- முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்
- முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்
- முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம்.
மேலும் கூறுகையில், முத்தலாக் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய விவகாரத்தில் எங்களுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கவில்லை. முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்.மேலும் முத்தலாக் சட்டம் என்பது மதம் தொடர்பானது அல்ல. வாக்கு வங்கிக்காக முத்தலாக் சட்டத்தை காங்கிரஸ் எதிர்த்து வந்தது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.