உருமாறிய கொரோனா வைரஸ் : இந்தியாவில் 6 பேருக்கு தொற்று உறுதி!
உருமாறிய கொரோன வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அனைத்து நாடுகளிலும் பிரிட்டனுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பிரிட்டனில் பொது முடக்கம் மீண்டும் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பரவியது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.