பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்றும் செப்டம்பர் 30 க்குள் இதை செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
இன்றைய காலத்தில், உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களாக மாறிவிட்டன. வங்கி வரி தாக்கல் போன்ற சேவைகளுக்கு நீங்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனுடன், நீங்கள் பெரிய தொகையை மாற்றினாலும் அல்லது நகை போன்ற விலையுயர்ந்த பொருளை வாங்கினாலும் நீங்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
இத்தகைய சூழ்நிலையில், வருமான வரித்துறை புதிய பான் பெறுவதையோ அல்லது தவறவிட்ட பான் எண்ணை மீண்டும் பெறுவதையோ மிகவும் எளிதாக்கியுள்ளது. உங்கள் ஆதார் அட்டை மொபைலுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பான் கார்டை எளிதாக பெறலாம். இதற்கு உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாகும். உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் இ-பான் பதிவிறக்கம் செய்ய முடியாது.
இந்நிலையில், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்றும் செப்டம்பர் 30 க்குள் இதை செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் யாராவது இதைச் செய்யாவிட்டால் பரிவர்த்தனையில் சிக்கல்கள் ஏற்படும் எனவும், ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் டெபாசிட் செய்ய பான் எண் இருப்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…