கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு இறுதி பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் – யுஜிசி சுற்றறிக்கை.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. ஆனால், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இதற்கு, மாணவர்களின் உயிரோடு யுஜிசி விளையாடுகிறது என மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், அது தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இதனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள், யுஜிசி.யின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லூரி, பல்கலைக் கழங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் இத்தேர்வுகளை நடத்த, யுஜிசி.க்கு தடை எதுவுமில்லை எனவும் கூறியுள்ளது. இதில் யுஜிசி.க்கு தான் முழு அதிகாரம் உள்ளது. தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை கண்டிப்பாக தேர்ச்சி பெற செய்யக்கூடாது. இறுதியாண்டு தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கினால்தான், சதவீதத்தின் அடிப்படையில் மாணவர்கள் உயர் படிப்புக்கு செல்ல முடியும்.
இது, மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவேளை தங்கள் மாநிலங்களில் இந்த தேர்வை நடத்தும் சூழல் தற்போது இல்லை என்றால், தேர்வை ஒத்திவைப்பது குறித்து யுஜிசி.யிடம் மாநில அரசுகள் முறையிடலாம். மாணவர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், ல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்திய முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…