பள்ளிவாசலில் இந்து மத முறைப்படி திருமணம் நடத்திய இஸ்லாமியர்கள்…!

Published by
murugan
  • சேரவல்லி பகுதியில் இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டி நேற்று பள்ளிவாசலில் இந்து முறைப்படியே ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
  • கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என பதிவிட்டு உள்ளார்.

கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில்இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு கடந்த நவம்பர் மாதம் கடிதம் ஓன்று வந்தது. அந்த கடிதத்தில் கணவரை இழந்த பிந்து என்ற பெண் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஜமாத் கமிட்டி உதவவேண்டும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு,பிந்துவின் மகள் திருமணத்தை ஜனவரி 19-ம் தேதி அதாவது நேற்று நடத்தலாம் முடிவு செய்தனர்.அதன் படி பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும் , கயம்குளம் பகுதியைச் சேர்ந்த சரத் சசி என்பவருக்கும் ஜமாத் கமிட்டியின் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.

Image

இவர்களின் திருமணம் பள்ளிவாசலில் நடைபெற்றாலும் இந்து முறைப்படியே இந்தத் திருமணம் நடைபெற்றது. பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு பத்து சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் பரிசாகக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முஸ்லிம் ஜமாத் மசூதி அஞ்சு & சரத் ஆகியோரின் இந்து மத திருமணத்தை நடத்தி வைத்துள்ளது. புதுமணத்தம்பதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், மசூதி நிர்வாகத்தினருக்கும், மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

47 minutes ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

59 minutes ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

2 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

3 hours ago