முஸ்லிம்கள் போராட்டத்தில் அமைதி காக்க வேண்டும்.! ஷியா பிரிவு தலைவர் வேண்டுகோள்.!
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் .
- அரசியல் கட்சிகள் திசை திருப்புவதால், முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் மாநிலத்தில் மட்டும் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் .
இந்நிலையில், இது நாடுமுழுவதும் அமல்படுத்தப்படாது என்ற அவர், அதுமட்டுமின்றி அதில் என்ன ஷரத்துகள் உள்ளன என்பது பற்றி இப்போது வரைக்கும் தெரியாது என்றார். ஆனால் அதற்குள் முஸ்லிம்கள் எதற்காக போராட வேண்டும், என்ற அவர் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை திசை திருப்புவதால், முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.