அயோத்தி ராமர் கோயிலுக்கு 2.1-டன் மணியை உருவாக்கிய இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள.!

Default Image

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தயால் என்பவர் 30 வருடங்களாக புது வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவரும் அவரது குழுவினரும் இந்த முறை உத்தரபிரதேசத்தின் ஜலேசர் நகரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.

தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி  இருவரும் சேர்து இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கியது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்கள்.

இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கும்போது சிரமத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்று நான்காம் தலைமுறை மணி தயாரிப்பாளரான 50 வயதான தயால் கூறுகிறார்.  எங்களுக்கு உற்சாகம் என்னவென்றால் நாங்கள் அதை ராம் கோயிலுக்கு உருவாக்குகிறோம் என்றார்.

மணி என்பது பித்தளை மட்டுமல்ல, தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களின் கலவையை கொண்டது. இதுபோன்ற வேலையில் வெற்றி பெறுவது எந்த வகையிலும் உத்தரவாதம் இல்லை. உருகிய உலோகத்தை அச்சுக்குள் ஊற்றுவதில் ஐந்து விநாடிகள் தாமதமாக இருந்தாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும் என்று மிஸ்திரி கூறுகிறார்.

இதில் என்னவென்றால் இது ஒரு துண்டு மேலிருந்து கீழாக மட்டுமே உள்ளது. இதில் பல துண்டுகள் ஒன்றாக பற்றவைக்கப்படவில்லை. இதுதான் வேலை மிகவும் கடினமாக்கியது என்று கூறுகினார்கள்

இந்தியாவின் மிகப்பெரிய மணிகளில் ஒன்றான இந்த துண்டு ராம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றனர்.   கடந்த நவம்பரில் இது குறித்து முடிவு செய்யப்பட்ட உடனேயே கோயில் கட்டுவதற்கு வழி வகுத்த அயோத்தி தகராறில் ஒரு வழக்குரைஞரான நிர்மோஹி அகாராவிடமிருந்து 2,100 கிலோ மணியை தயார் செய்ய மிட்டல்களுக்கு உத்தரவு கிடைத்தது.

இந்த வேலை எங்களுக்கு வந்ததற்கு ஏதேனும் தெய்வீக காரணம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, அதை ஏன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று தலைவரின் சகோதரர் ஆதித்யா கூறுகிறார். இது அவர்களுக்கு 21 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று கூறினார்.

சுமார் 25 தொழிலாளர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் ஒரு மாதம், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் உழைத்து நாட்டில் மிகப்பெரிய மணியை உருவாக்க முடியும். இதற்கு முன் தயால் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பயன்படுத்தப்பட்டு வரும் 101 கிலோ மணி மணியை உருவாக்கியது குறிபிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்