பெண்களின் திருமண வயது விவகாரம்… எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லீம் பெண்கள் அமைப்பினர்.!
பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு.
முஸ்லீம் பெண்கள் அமைப்பினர், பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் செயலாளர் பி.கே.நூர்பனா ரஷீத் அவர்கள் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பல வளரும் நாடுகளில் பெண்களின் வயதை 21-லிருந்து 18-ஆக குறைந்துள்ளன. இந்த முடிவை உயிரியல் ரீதியான மற்றும் சமூக தேவையை கருத்தில் கொண்டு எடுத்தனர். ஆனால், இந்தியாவில், பெண்களின் திருமண வயதை, 18-ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
இவ்வாறு,பெண்களின் திருமண வயதை அதிகரித்தால், கொள்ளாமல், ஆணும், பெண்ணும் சேர்ந்துவாழ்வதற்கும், சட்டவிரோத உறவுகளுக்கும் வழிவகுப்பதாக அமாந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை திருமண சட்டத்தை அமல்படுத்துவதற்கு பதில், சட்டபூர்வ திருமண வயதை அதிகரிப்பது அநீதியான செயல் என்றும், ஊரக பகுதியில், 30 சதவிகித பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே இருமனம் நடைபெறுவதாக கூறப்படுகிறது என்றும், திருமண வயதை அதிகரித்தால், இன்னும் நிலை மோசமாகும், எனவே பெண்களின் வயதை உயர்த்தக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.