முஸ்லீம் மணமகளும், கிறிஸ்தவ மணமகனும்.! இந்து முறைப்படி நடந்த திருமணம்.!
கிறிஸ்தவரான மணமகனும் முஸ்லிமான மணமகளும் இணைந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டத்தில் வண்ணாருகூடம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் அனில்குமார். இவரும், அதே பகுதியில் கொல்லகூடத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணான ஷேக் சோனியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
ஆனால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில் திருமணம் தள்ளி போய் கொண்டிருந்தது. அதனையடுத்து கொல்லகூடத்தில் உள்ள இந்துக்கள் இணைந்து ஷேக் சோனியின் பெற்றோரிடம் பேசிய போது, கடைசியில் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதனையடுத்து இந்த காதல் ஜோடிகள் தங்களது திருமணத்தை இந்து முறைப்படி செய்து கொள்ள முடிவு செய்தனர். ஏனெனில் இவர்களின் திருமணம் நடைபெற காரணம் இந்துக்கள் என்பது அவ்வாறு ஒரு முடிவு எடுத்தனர். அந்த வகையில் நேற்றைய முன்தினம் இந்த காதல் ஜோடிகளின் திருமணம் மேளம் தாளங்களுடனும், மந்திரங்கள் முழங்கவும், அக்னியை வலம் வந்து, தாலி கட்டி இந்து முறைப்படி மூன்று மதங்களை சேர்ந்தவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.