இசைஞானி இளையராஜா,தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர்.
பழம்பெரும் தடகள வீராங்கனை பி டி உஷா மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
தர்மஸ்தலா கோவிலின் பரோபகாரரும், நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்கடே மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் பாராளுமன்ற மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது
பி.டி. உஷா அவர்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்பட்டாலும், கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணியும் பாராட்டத்தக்கது,ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துகள்.
தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா என்றும் அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது – அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்துள்ளார். அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக…
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…